ரூ.50 கோடி வசூலைக் கடந்த விஷால் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘மார்க் ஆண்டனி’ 

சென்னை: விஷால், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படத்தை மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இதன் எதிரொலியாக படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடியைத் தாண்டி வசூலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் படம் ரூ.35 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படிப் பார்க்கும்போது இந்தப் படம் விஷால் திரைப் பயணத்தில் விரைவாக ரூ.50 கோடி க்ளப்பில் இணைந்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் நிலையில், இப்படம் லாபத்தை எட்டியுள்ளது. மேலும், இந்த வாரம் பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவராததால் வசூல் எண்ணிக்கை கூடும் எனத் தெரிகிறது.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *