எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். அவரது வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘800’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில், இந்த தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என முரளிதரன் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கே சாதகமாக இருக்கக்கூடும். ஏனெனில் அவர்கள் சிறந்த அணி. மேலும் சொந்த மண் சாதகமும் உள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது. இது வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும். இந்திய அணிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தானுக்கு வாய்ப்புகள் உள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: www.hindutamil.in
