சென்னை: தங்கர் பச்சான் இயக்கியுள்ள ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தைப் பார்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இயக்குநர் தங்கர் பச்சான் படைத்திருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தை பார்த்தேன்; ரசித்தேன். இப்போது வெளியாகும் படங்கள் கோரம், ரத்தம், கொலை, வன்முறை, ஆபாசம், இரட்டைப் பொருள் தரும் வசனங்களால் நிறைந்துள்ள நிலையில், இந்தத் திரைப்படம் குடும்ப உறவுகளின் மகிமை, பாசம், கலாச்சாரம் ஆகியவற்றை பேசுகிறது. இந்தத் திரைப்படத்தை பொதுமக்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்க்க வேண்டும்.
இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், கவுதம் வாசுதேவ் மேனன், ஆர்.பி. உதயகுமார், நடிகர் யோகிபாபு ஆகியோர் அவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது!” என பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் தங்கர்பச்சான் படைத்திருக்கும் ‘#கருமேகங்கள்கலைகின்றன’
திரைப்படத்தை பார்த்தேன்; ரசித்தேன். இப்போது வெளியாகும் படங்கள் கோரம், ரத்தம், கொலை, வன்முறை, ஆபாசம், இரட்டைப் பொருள் தரும் வசனங்களால் நிறைந்துள்ள நிலையில், இந்தத் திரைப்படம் குடும்ப உறவுகளின் மகிமை, பாசம்,… pic.twitter.com/6gm1jAdwOj
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 5, 2023
நன்றி
Publisher: www.hindutamil.in