பிஆர் டாக்கிஸ் கார்பரேஷன் சார்பில் பாஸ்கரன் பி, ராஜபாண்டியன் பி இணைந்து தயாரிக்கும் படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கின்றனர்.
இந்நிறுவனத்தின் தயாரிப்பில், சுரேஷ் ரவி நடித்த ‘காவல்துறை உங்கள் நண்பன்’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. தற்போது இவர்கள் இதில் மீண்டும் இணைந்துள்ளனர். கிராமத்து பின்னணியில் காமெடி டிராமாவாக இந்தப் படம் உருவாகிறது. கே. பாலையா எழுதி இயக்குகிறார். தீபா பாலு, பிரிஜிடா சாகா, தேஜா வெங்கடேஷ் ஆகியோருடன் கருணாகரன், வேல ராமமூர்த்தி, அப்புக்குட்டி, ஆதிரா உட்பட பலர் நடிக்கின்றனர்.
கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியுள்ளது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in