பட்ஜெட் விலையில் ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

செய்திப்பிரிவு

Last Updated : 04 Sep, 2023 07:09 PM

Published : 04 Sep 2023 07:09 PM
Last Updated : 04 Sep 2023 07:09 PM

சென்னை: பட்ஜெட் விலையில் ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது ரியல்மி சி51 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

ரியல்மி சி51 சிறப்பு அம்சங்கள்

  • 6.74 இன்ச் ஹெச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே
  • ஆக்டா-கோர் யுனிசாக் டி612 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
  • 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ்
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5,000mAh பேட்டரி
  • 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
  • 4ஜி நெட்வொர்க்
  • ட்யூயல் சிம் கார்ட் பயன்படுத்தலாம்
  • இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ.8,999 முதல் தொடங்குகிறது

தவறவிடாதீர்!




Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *