‘கருமேகங்கள் கலைகின்றன’ இன்று சிறப்பு திரையிடல்

சென்னை: தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘கருமேகங்கள் கலைகின்றன’. பாரதிராஜா, கவுதம் மேனன், யோகிபாபு, அதிதி பாலன் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செப்.1ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்திய சினிமாவில் புது முயற்சியாக ரிலீஸுக்கு ஒரு வாரம் முன்பே,இந்தப்படத்திற்கான குடும்ப காட்சி ஒன்றை திரையிட ஏற்பாடு செய்துள்ளனர்.

பொதுவாக ஒரு படம் வெளியாகும் முன் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்குத்தான் சிறப்புக் காட்சியை வெளியிடுவார்கள். முதன்முறையாக பொதுமக்களுக்காக திரையிடுகிறார்கள். ஆர்வமுள்ள ரசிகர்களுக்கு போட்டிக்கான நிபந்தனைகளை அறிவித்து தகுதியானவர்களைத் தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்கு சென்னை வடபழனியில் உள்ள திரையரங்கு ஒன்றில் இந்தப்படம் இன்று திரையிடப்பட இருக்கிறது. அவர்களோடு, படத்தில் நடித்த கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *