
வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் உலகக் கோப்பை எனும் பெரிய தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிதான் உலகக் கோப்பையின் சாராம்சம் போல் உயர்வு நவிற்சிகள், ஊதிப்பெருக்கல்கள், தூண்டி விடும் பேட்டிகள் என்று இன்னும் எத்தனை எத்தனையோ வரவிருக்கின்றன. இந்நிலையில், ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்கிறார் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லத்தீஃப். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலவீனமானது, எனவே பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று அவர் கூறியுள்ளார்.
ஆசியக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கவாஸ்கரே கடுப்பாகி விமர்சிக்க வேண்டாம், அவரவர் தங்களுக்கு விருப்பமான வீரரை தேர்வு செய்யவில்லை என்று தேர்வு செய்யப்பட்ட வீரரை விமர்சிக்காதீர்கள். இதுதான் அணி. ஆட்டத்தை பார்க்க இஷ்டம் இருந்தால் பாருங்கள். இல்லையெனில் வாயை மூடுங்கள் என்று ரசிகர்களின் வாயை அடைக்க பார்க்கிறார். கவாஸ்கரே கூட அணித்தேர்வுகளை முன்பெல்லாம் பத்திரிகையாளர்கள் முன்னால் அறிவிப்பார்கள், ஆனால் இப்போதெல்லாம் வெறும் பட்டியல் மட்டும்தான் வெளியாகிறது என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார்.
நன்றி
Publisher: www.hindutamil.in
