”தினமும் 100 ஆபாச மெசேஜ்கள்”..!! ”தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாது”..!! சீமானை எச்சரித்த வீரலட்சுமி..!!

”தினமும் 100 ஆபாச மெசேஜ்கள்”..!! ”தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாது”..!! சீமானை எச்சரித்த வீரலட்சுமி..!!

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது என தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனத் தலைவி வீரலட்சுமி சவால் விடுத்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் இருந்து சீமானுக்கும், வீரலட்சுமிக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. தன்னால் வழக்கை எதிர்கொள்ள முடியவில்லை என்றும் வீரலட்சுமி தன்னை வேறு ரூட்டிற்கு அழைத்து செல்ல பார்க்கிறார் என்றும் கூறி சீமான் மீதான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். இந்நிலையில், சீமானும் விஜயலட்சுமியும் ஒன்று சேர்ந்தால் மகிழ்ச்சியே என வீரலட்சுமி கூறிய நிலையில், சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது.

வீரலட்சுமியை சீமான் ஒருமையில் விமர்சித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரான போது வீரலட்சுமி தன்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என சீமான் கோரியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக வீரலட்சுமி பேசுகையில், விஜயலட்சுமி வழக்கு ஊடகங்கள் பேசும் அளவுக்கு தெரியப்படுத்தியே நாங்கதான். எங்கள் உழைப்பு, திறமையால்தான் இந்த வழக்கு வெளியே வந்திருக்கிறது.

இதனால் எனக்கு நிறைய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. நல்லது செய்ய போய் எனக்கு கெட்டபெயர் தான் மிஞ்சியது. என் வாட்ஸ் அப் எண்ணுக்கு தினமும் 100 பேர் ஆபாச மெசேஜ்களை அனுப்புகிறார்கள். ஒரு பெண் தலைவர் என்றும் பாராமல் ஆணும் பெண்ணும் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை அனுப்புகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை நிர்வாகிகளும் கடுமையாக பேசுகிறார்கள். ஆட்சி அதிகாரத்திற்கு வரும் முன்பே இப்படி செய்கிறார்கள். மக்கள் ஓட்டு போட்டு இவர்களை தேர்வு செய்தால், பெண்களுக்கு தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி பாதுகாப்பானதா?

2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, 2021 இல் நடந்த சட்டசபை தேர்தலிலும் சரி நாம் தமிழர் கட்சியினர் ஒரு இடத்திலாவது டெபாசிட் வாங்கினார்களா? டெபாசிட் வாங்க முடியல, நீங்கள் பெண்கள் உரிமையை பற்றி பேசுறீங்களா? வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி டெபாசிட் வாங்க முடியாது என வீரலட்சுமி கொந்தளித்து பேசியுள்ளார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *