மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின்கீழ் வழங்கப்படும் 6000 ரூபாயின் அடுத்த தவணையை பெறுவதற்கு kyc பெறுவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு வருடம் தோறும், மூன்று தவணைகளில் மொத்தம் 6000 ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதுவரையில், விவசாயிகளின் வங்கி கணக்கில் 14 தவணைகள் வரவு வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தற்போது 15வது தவணை அனுப்பப்பட இருக்கிறது. இது பற்றிய அதிகபட்ச விவரங்களுக்கு pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் விதிகளின்படி, முதல் தவணை ஏப்ரல் மற்றும் ஜூலை, அதோடு, இரண்டாவது தவணை ஆகஸ்ட் மற்றும் நவம்பர் போன்ற மாதங்களுக்கும், 3வது தவணை டிசம்பர் முதல், மார்ச் மாதம் வரையில் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தபடியாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான 2000 ரூபாய் தவணை தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும், இறுதி தேதிக்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் தான், 15வது தவணையை பெறுவதற்கு e.kyc செய்ய வேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில், நிலச்சரிப்பார்ப்பு மற்றும் வங்கி கணக்குடன், ஆதார் அட்டையை இணைப்பது மிகவும் முக்கியம் என்று கூறப்படுகிறது. இந்த மூன்று விஷயங்களையும் செய்யாவிட்டால், அடுத்த தவணையின் பலனை விவசாயிகளால் பெற முடியாமல் போகலாம்.
இதில் ஏதாவது பிரச்சனை உண்டானால், பயனாளிகள் pmkisan yojanaவின் ஹெல்ப்லைன் எண் 155261 அல்லது 1800115526 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் வழங்கலாம்.
இந்தத் திட்டத்தின் விதிகளின் அடிப்படையில், ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே பலன் பெற முடியும். குடும்பத்தில் இருக்கின்ற கணவன், மனைவி இருவரும் இந்தத் திட்டத்தில் பயன்பெற்று இருந்தால், அவர்களிடம் இருந்து அந்த பணம் திரும்ப பெறப்படும். ஏனென்றால், அத்தகையவர்கள் இந்த நிதிக்கு தகுதியற்றவர்கள் என்று கூறப்படுகிறது. பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தின் பலன் ஒரு விவசாய குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்று மத்திய அரசும் பலமுறை தெளிவாகக் கூறியிருக்கிறது.
இந்தத் திட்டத்தில், ekyc செய்வது எப்படி? என்பதை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். pmkisanன் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, பார்வையிடவும், அதற்குப் பிறகு, முகப்பு பக்கத்தின் வலது பக்கத்தில், இருக்கின்ற ekyc விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இதில் உங்களுடைய ஆதார் அட்டை எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பின், ஆதார் அட்டையுடன், இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். பிறகு get OTP என்பதை கிளிக் செய்து, வழங்கப்பட்டுள்ள பெட்டியில் OTP ஐ உள்ளிட வேண்டும்
நன்றி
Publisher: 1newsnation.com
