’ஜெயிலர்’ வெற்றிக்காக நெல்சனுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு..? அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்..? அவரே கூறிய உண்மை..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் இரண்டு வாரங்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.

இந்நிலையில், சமீபகாலமாக ஒரு படம் வெற்றி பெற்றால் அப்படத்தின் இயக்குநருக்கோ, நடிகருக்கோ தயாரிப்பாளர்கள் கார் பரிசளித்து வருவது வழக்கமாக உள்ளது. விக்ரம் படத்தின் வெற்றிக்காக லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் கார் பரிசளித்திருந்தார். அதேபோல், சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார் கமல். மாமன்னன் வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜுக்கு கார் பரிசளித்தார் உதயநிதி ஸ்டாலின்.

அதே வரிசையில் தற்போது ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக இயக்குனர் நெல்சனுக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கார் பரிசளிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் நெல்சனே இதுகுறித்து பேசியுள்ளார். ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து காமெடியனாக நடித்த ரெடின் கிங்ஸ்லி நெல்சனை பேட்டி எடுத்தார். அதில் ஒரு கேள்வி தான் இந்த கார் பரிசு விவகாரம். வீட்டு வாசலில் ரோல்ஸ் ராய்ஸ் கார் நிக்குதாமே என ரெடின் கேட்டவுடன் ஷாக் ஆன நெல்சன், அதை நானும் கேள்விப்பட்டேன், நடந்தா சந்தோஷம் என தன் ஆசையை சைடு கேப்பில் கூறிவிட்டார்.

இதன்மூலம் தனக்கு இன்னும் எந்த காரும் பரிசாக வழங்கப்படவில்லை என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார் நெல்சன். ரெடினை தன் பங்கிற்கு கலாய்க்கும் விதமாக ஜெயிலர் வெற்றியால் அனைவருக்கு டிவி பரிசாக வழங்கப்பட இருப்பதாக, நெல்சன் கூறியதுடன், ஷாக்கான ரெடின், சரி நீ என்ன பண்ண போற எங்களுக்கு என நெல்சனை கேட்க, அவரோ, ஆளுக்கு ஒரு முத்தம் கொடுக்கிறேன் வாங்கிக்கோங்க எனக்கூறி அந்த பேட்டியை காமெடி களமாக்கினார்.

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *